மூச்சுப்பயிற்சி !!!!!
* தினமும்
காலை, மாலை
வேளைகளில் 5
நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம்
முழுவதும் ‘ப்ரெஸ்’ ஆக
காணப்படுவீர்கள்.
* தினமும் காலையில் எழுந்ததும் ஒரு
லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் அன்றைய நாள் முழுவதும்
சுறுசுறுப்பாக வலம் வருவீர்கள். சோர்வு என்பதே எட்டிப்பார்க்காது.
* தினமும் காலையில் எழுந்ததும்
பழங்கள் சாப்பிடுவது இளமையை அதிகரிக்கும். குறிப்பாக, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளிப் பழங்கள்
சாப்பிடுவது நல்லது.
* தினமும் காலையில் ஒன்று அல்லது
இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.
* கறிவேப்பிலையின் இளம் தளிர்களை காய
வைத்து பொடியாக்கி, அதை தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில்
தேய்த்து வந்தால் முடி கருகருவென்று வளரும்.
* தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து
வந்தால் முகப்பரு தொல்லை வராது.
* 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு தடவை முல்தான் மெட்டியுடன் பன்னீர் கலந்து
முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று காணப்படும்.
* 2 டீஸ்பூன்
தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு 4 சொட்டு கலந்து குடித்து
வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.
* பப்பாளி
வயிற்றுக்கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது, செரிமானத்தை ஊக்குவிக்கிறது,
பப்பாளிக்
காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
* பப்பாளி
தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து
தயாரிக்க பயன்படுகிறது.
* பப்பாளி
இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக்
குணப்படுத்தவும் இது உதவுகிறது.
No comments:
Post a Comment