நாம் பலருக்கும் குல தெய்வம் என்றொன்று இருக்கும். காலத்தின் கோலத்தால் அதை மறந்து போனவர்களும் உண்டு ! இந்த குலதெய்வம் என்றால் என்ன என்பதை பார்க்கும் முன்.. ஆதி சித்தனாம் சுப்பிரமணியன் சொல்வதைக் கேட்போம் …
“தேளடா தேட்கொடுக்காங் குல தெய்வந்தான்
சீவநிலை சிவநிலையும் அதுவேயாகி .. ”
சீவநிலை சிவநிலையும் அதுவேயாகி .. ”
என்று “சுப்பிரமணியர் ஞானம் ” என்னும் நூலில் 6 வது பாடலில் கூறுகிறார்.
தேள் கொடுக்கைப் போன்ற உருவம் என்றும் … தேள் கொடுக்கின் விஷம் எவ்வாறு கொட்டினவுடன் வலி ஏற்படுத்துமோ அதுபோல வீரியம் உள்ளது என்றும் கூட அர்த்தம் கொள்ளலாம் ..
தேளிற்கு எவ்வாறு அதன் கடைசி நுனியில் வீரியம் உள்ளதோ அதுபோல ஆதியிலே என்றும் கொள்ளலாம்.
அது நிற்க ..
“இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
#குலனுடையான் கண்ணே யுள. 223 ”
#குலனுடையான் கண்ணே யுள. 223 ”
“சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
#குலம்பற்றி வாழ்தும் என் பார்”
#குலம்பற்றி வாழ்தும் என் பார்”
“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
#குலத்தின்கண் ஐயப் படும்”
#குலத்தின்கண் ஐயப் படும்”
“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
#குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்”
#குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்”
“நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் #குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு”
வேண்டுக யார்க்கும் பணிவு”
குடிமை என்னும் அதிகாரத்தில் குலத்தைப்பற்றி வள்ளுவர் சொன்னது ! இவர் சொல்வதெல்லாம் நமது உடலிலும் செயலிலும் வெளிப்படையாகத் தோன்றும் மூதாதையர் சுவடுகள் ! நாம் நமது பிள்ளைகளிடம் விட்டுச்செல்லும் சுவடுகள் ! பற்றியவை … எம் சாதி இனம் என்றெல்லாம் நாம் .. ஆதி மறந்து .. மார்தட்டிகொள்வது!
//சீவநிலை சிவநிலையும் அதுவேயாகி // என்பதில்தான் நாம் அறியவேண்டிய உண்மை இருக்கிறது !
சீவநிலை யாகவும் — அதாவது நம்முள் வாழும் உயிராகவும்
சிவநிலை யாகவும் — அதுவே சிவம் – பரம் – இறையாகவும்
சிவநிலை யாகவும் — அதுவே சிவம் – பரம் – இறையாகவும்
என்று பொருள். அப்படியானால் நாம் உயிர் என்பது – சீவன், பிரபஞ்சம் முழுவதும் இருப்பது – சிவன். இந்த இரண்டும் ஒன்றே !! அதுவே குல தெய்வம். அதெப்படி ?
” தந்தைதாய் கருவதனி லுதித்த வாறுந்
தாரணியில் கருத்திரண்டு பிறந்த வாறும் ” – ஞானம் எட்டியான்
தாரணியில் கருத்திரண்டு பிறந்த வாறும் ” – ஞானம் எட்டியான்
தந்தையும் தாயும் புணர்ந்து உயிர் உருவானது என்பது தான் சித்தர்கள் பலரும் சொல்லும் பிறப்பின் ரகசியம்.
தந்தையாய் கருவதனில் உதித்த வாறு என்கிறார் .. எந்தந்தையே நானாக உருவெடுத்திருக்கிறார் !
அப்படியானால் நாம் நம் தந்தை தாயிடம் இருந்து உயிர் பெறுகிறோம் .. அவர்கள் பாட்டன் பாட்டியிடமும் .. அவர்கள் அவர்களின் முன்னோர்களிடமும் தான் உயிர் தானம் பெற்றிருக்கவேண்டும் ..
அப்படி குல வழியாக நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனே – குல தெய்வம் . யார் அவர் ? நம் பாடடனும், பூட்டனும், முப்பாட்டனும் அழிந்துவிடவில்லை ! அவர்கள் நம்முள்ளே உயிராக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ! அப்படி பார்த்தோமானால் இன்னொரு ரகசியத்தையும் – உண்மையையும் நாம் அறிய முடியும்..
பின்னோக்கி ஆயிரமாயிரம் ஆண்டுகள் சென்றால்.. ஆதியில் மனிதம் தோன்றிய காலத்து ஒருவனே நம் அனைவரின் மூலமாக இருக்க முடியும் .. அவன் அழிந்து விடவில்லை .. அவனே நம் அனைவரின் உள்ளும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆன்மா !
அதனால்தான் //ஆன்மாவே இறைவனென்று அறியவேண்டும் // என்று சுப்ரமணியர் தம் ஞான நூலில் பாடுகிறார் !
இதைத்தான் திரு மூலரும்
“புலம் ஐந்து புள்ஐந்து புள்சென்று மேயும்
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
#குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி ஒன்பது தானே”
நிலம்ஐந்து நீர்ஐந்து நீர்மையும் ஐந்து
#குலம் ஒன்று கோல்கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம்வந்து போம்வழி ஒன்பது தானே”
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே”
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே”
எல்லாம் பஞ்ச பூதம் என்றவர்,, நாமெல்லாம் ஒரே குலம்! நம்மை மேய்ப்பவன் ஒருவன் ! என்கிறார் .
நமக்கு யாரும் மூலத்தை, அதன் வழி வழி பரம்பரையை, குறிப்பாக எழுதி வைக்கவில்லை.. எழுதி வைப்பது சாத்தியமும் இல்லை. நமது முன்னோர்களும் ஒரு ஆறு ஏழு தலைமுறைக்குத்தான் ஞாபகம் வைத்திருகின்றனர். அதனால் பாட்டனின் பெயரை பிள்ளைக்கு வைக்கும் பழக்கம் இன்றும் கூட காலத்தால் அழிந்து போகாமல் உள்ள கிராமப் புறங்களில் காணலாம் !
முன்னோர்களின் சமாதியை வழிபடுவதும். அவர்கள் பயன்படுத்திய சூலாயுதம், வேலாயுதம், கத்தி, அரிவாள் போன்றவற்றை நட்டு வைத்து வணங்கும் முறையும் நம்மிடையே காணப்படுகிறது! இதைத்தான் அவரவர்கள் குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். உண்மையில் குலதெய்வமாக வழிபட வேண்டியவர்கள் நம் முன்னோர்களே !
என்ன செய்வது என் தாத்தாவைப்போலவே அடியேனும் இருப்பதாக //பெருமையாக// எங்கப்பன் சொல்வதின் அர்த்தம் …
“உங்க பரம்பரையும் உங்களைப்போலத்தான் ஊதாரியா?” என்று மனைவி கேட்டபோதுதான் விளங்கியது !
No comments:
Post a Comment