Translate

Wednesday, September 4, 2013

கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்கள்!!!









மோர் 
 
மோரைக் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து வந்தால், மோரில் உள்ள எண்ணெய், ஸ்கால்ப்பில் வறட்சி ஏற்படுவதைத் தடுத்து, மயிர்கால்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதனால் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.
 
 
பீர்

முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமெனில், பீரைக் கொண்டு முடியைப் பராமரிப்பது தான் சிறந்தது. அதற்கு வாரத்திற்கு ஒரு முறை, பீரைக் கொண்டு தலையை மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து பின் அலச வேண்டும். இந்த முறையை தொடர்ந்து மூன்று வாரத்திற்கு செய்து வந்தால், பொடுகு வருவது குறைந்து, முடியும் நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
 

ப்ளாக் டீ 
 
ப்ளாக் டீ குடிக்க மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் பயன்படுகிறது. குறிப்பாக கூந்தல் பராமரிப்பில் பெரிதும் துணையாக உள்ளது. அதற்கு 50 மிலி ப்ளாக் டீயை எடுத்துக் கொண்டு, தலையில் ஊற்றி, மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் கூந்தல் பட்டுப் போன்றும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.
 

காபி 
 
காபியைக் கொண்டு முடியை பராமரித்தால், முடி மென்மையாக இருக்கும். அதிலும் தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தப் பின்னர், இறுதியில் ப்ளாக் காபி கொண்டு அலசி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, மீண்டும் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். முக்கியமாக இந்த முறையை பின்பற்றும் போது, டவல் கொண்டு தான் முடியை உலர வைக்க வேண்டும். மேலும் இதனை மாதத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.
 

ஒயின் 
 
சில பெண்களுக்கு கூந்தலானது பொலிவிழந்து காணப்படும். அத்தகையவர்கள், 1/2 டம்ளர் ரெட் ஒயினை, 1/2 வாளி தண்ணீரில் கலந்து, ஷாம்பு போட்டு குளித்தப் பின்னர், ஒயினை தண்ணீரைக் கொண்டு அலச வேண்டும். இந்த முறையை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
 

வோட்கா 
 
பலருக்கு வோட்கா மிகவும் விருப்பமான பானமாக இருக்கலாம். அத்தகைய வோட்கா, கூந்தலைப் பராமரிக்க உதவும் ஒரு பானமும் கூட. அதற்கு 20 மிலி வோட்காவை, வெதுவெதுப்பான நீரில் கலந்து, முடியை அலசினால், முடி வெடிப்பு வராமல் இருப்பதோடு, கூந்தலும் நன்கு அழகாக இருக்கும்.
 
அரிசி தண்ணீர் 
 
 முடியை அரிசித் தண்ணீரால் அலசினால், கூந்தல் நன்கு பட்டுப்போன்று மின்னும். ஏனெனில் அரிசித் தண்ணீரில் கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் ஸ்டார்ச் அதிகம் இருப்பதால், இதனைக் கொண்டு கூந்தலை அலசினால், கூந்தல் ஆரோக்கியமாக வளரும்.
 

இளநீர் 

முடி மென்மையிழந்து இருந்தால், அப்போது அதனை மென்மையாக்குவதற்கு, இளநீர் கொண்டு அலச வேண்டும். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை இச்செயலை செய்து வந்தால், கூந்தல் மென்மையாகவும், போதிய சத்துக்கள் கிடைத்து ஆரோக்கியமாகவும் வளர்ச்சியடையும்.
 
க்ரீன் டீ

கூந்தல் உதிர்தலை தடுக்க சிறந்த வழியென்றால், க்ரீன் டீயைக் கொண்டு முடியைப் பராமரிப்பது தான். ஏனெனில் இதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதற்கு 1 கப் க்ரீன் டீயைக் கொண்டு கூந்தலை அலச வேண்டும். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும்.
 

நெல்லிக்காய் ஜூஸ் 
 
நெல்லிக்காஙைய கடவுள் தந்த வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஆம், ஏனெனில் நெல்லிக்காயில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே மாதத்திற்கு இரண்டு முறை, நெல்லிக்காயை சாறு எடுத்து நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

No comments: