பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்
என்று சொல்வார்கள். ஏனெனில் தனியாக இருக்கும் போது எந்த செயலையும் பயமின்றி
செய்யலாம். ஆனால் கருவை சுமக்கும் போது ஒரு சில செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் பெண்கள், தைரியமாக எந்த ஒரு செயலையும் துணிந்து செய்கின்றனர். துணிச்சல் இருக்க வேண்டியது தான். ஆனால் அதே சமயம் சற்று கவனமாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் தற்போது எந்த நோய் எப்போது வரும் என்பது தெரியாது. நமது உடலை நாம் தான் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நமது வீட்டில் இருக்கும் பெரியோர்கள் கர்ப்பமாக இருக்கும் போது,இது செய்ய வேண்டும் இது செய்யக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். இவை அனைத்தும் நமது நன்மைக்கே. ஆகவே அவ்வாறு சொல்லும் செயல்களில், கர்ப்பமாக இருக்கும் போது எவற்றில் கவனமாக இருக்க வேண்டும் என்று குழந்தைப்பேறு மருத்துவர் சிலவற்றை பட்டியலிட்டுள்ளார். அதைப் படித்து தெரிந்து கொண்டு, குழந்தை கவனமாகவும், பாதுகாப்பாகவும் பெற்றெடுங்கள்.
தைராய்டு
இன்று தைராய்டு பிரச்சனை அதிகமாக உள்ளது. அதில் ஹைப்போ மற்றும் ஹைப்பர் என்று இரண்டு வகைகள் உள்ளன. இதனை பரிசோதனை செய்வதன் மூலம் மட்டுமே தெரியும். ஆகவே இதனை சரியாக பரிசோதித்து, அதற்கான மருந்துகளை சாப்பிட்டு வர வேண்டும். இல்லையெனில் கருச்சிதைவு அல்லது குழந்தைக்கு வேறு ஏதாவது பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே கர்ப்பம் ஆவதற்கு முன்பே இதனை பரிசோதித்து, ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சையை மேற்கொண்டால், பிரசவம் நல்ல படியாக எந்த ஒரு பிரச்சனையுமின்றி நடைபெறும்.
தண்ணீர்
கர்ப்பமாக இருக்கும் போது அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அந்த அளவு கருச்சிதைவு தடுக்கப்படுவதோடு, செரிமான மண்டலம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் தடுக்கப்படும். ஆகவே ஒரு நாளைக்கு கர்ப்பிணிகள் குறைந்தது, 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
பூனை
வீட்டில் ஆசையாக பூனை வளர்த்தால், அதன் கழிவுகளை கர்ப்பமாக இருக்கும் போது சுத்தம் செய்வதை தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அவற்றில் டாக்சோப்ளாஸ்மோசிஸ் என்னும் தொற்றுநோயை உண்டாக்கும் கிருமியானது உள்ளது. இந்த கிருமி உடலில் நுழைந்துவிட்டால், மூளை பாதிப்பு மற்றும் கண் பார்வை கோளாறு போன்றவற்றை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படுத்தும்.
வாழைப்பழம்
கர்ப்பத்தின் போது கால் குடைச்சல், குதிகால் வலி போன்றவை ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியை சரிசெய்ய தினமும் ஒரு வாழைப்பழத்தை படுக்கும் முன் சாப்பிட வேண்டும். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் வலிகள் மற்றும் குடைச்சலை சரிசெய்யும்.
உடற்பயிற்சி
கர்ப்பமாக இருக்கும போது செய்யும் செயல்களில் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவை தான் பாதுகாப்பான பிரசவத்தை தரும். ஆகவே தினமும் உடற்பயிற்சியை செய்வதால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, மன அழுத்தமும் குறையும். அதிலும் நடைப்பயிற்சி மிகவும் நல்லது.
போலிக் ஆசிட் உணவுகள்
கர்ப்பத்தின் போது குழந்தையின் வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், குழந்தை பிறக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். அதிலும் குறைந்தது 400 முதல் 800 மைக்ரோ கிராம் ஃபோலிக் ஆசிட் உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். பச்சை இலைக் காய்கறிகள், பீன்ஸ் மற்றும் சிட்ரஸ் பழங்களில் ஃபோலிக் ஆசிட் உள்ளது. முக்கியமாக இவற்றை சாப்பிடும் போது, மேலே குறிப்பிட்டுள்ள அளவுக்கு குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ சாப்பிடக் கூடாது.
ஆல்கஹால், சிகரெட், காப்ஃபைன்
இந்த மூன்று உணவுப் பொருளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை பிரசவத்தின் போது குழந்தைக்கும், தாய்க்கும் பெரிய பிரச்சனையை உண்டாக்கும். அதிலும் சிகரெட் பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதில் உள்ள நிக்கோட்டின் என்னும் பொருள், குழந்தையின் உடல் எடையை பாதிக்கும்.
தூக்கம்
கருவை சுமக்கும் போது, குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியமானது. நல்ல இரவுத் தூக்கம், குழந்தை மற்றும் தாய்க்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.
பல் பராமரிப்பு
இந்த சமயத்தில் கர்ப்பிணிகளுக்கு அதிகமான அளவில் கால்சியம் குறைபாடு ஏற்படும். அதனால் ஈறுகளில் பிரச்சனை ஏற்பட்டு, சில நேரங்களில் இரத்தம் வடிதல் கூட ஏற்படும். ஆகவே தினமும் 2 முறை ஃப்ளோரைடு டூத் பேஸ்ட் பயன்படுத்தி பற்களைத் தேய்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, அவ்வப்போது பல் மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.
பாத பராமரிப்பு
கால்களில் சோர்வு மற்றும் வீக்கத்தை தடுக்க, கால்களுக்கு சரியான காலணிகளை அணிந்து கொள்ள வேண்டும்.
இறைச்சி
இறைச்சி உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் பல வகையான கெமிக்கல்களான DDT மற்றும் மற்ற பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி பதப்படுத்தப்பட்டிருக்கும். இவற்றை உண்டால், உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதோடு, மிகுந்த சேதத்திற்கு ஆளாகும்
அதிக வெப்பம்
அதிக சூடாக இருக்கும் நீரிலோ, சுடு நீர் ஷவரிலோ குளிக்கக் கூடாது. ஏனெனில் அவை குழந்தைக்கும், தாய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
அழகுப் பொருட்கள்
கர்ப்பமாக இருக்கும் போது கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அதில் உள்ள கெமிக்கல்கள் குழந்தையை பாதிக்கும். வேண்டுமென்றால் இயற்கைப் பொருட்களை பயன்படுத்தலாம்.
எடை
கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதத்தில் ஒரு பவுண்ட் எடையாவது அதிகரித்திருக்க வேண்டும். மேலும் உண்ணும் உணவில் ஒரு நாளைக்கு 135 கலோரி உணவானது சேர்க்க வேண்டும். அந்த கலோரியை பெற ஒரு டம்ளர் பால், ஊட்டச்சத்துள்ள உணவுகள் மற்றும் தினமும் 1 முட்டை என்று சாப்பிட்டாலே போதும்.

No comments:
Post a Comment