Translate

Tuesday, October 2, 2012

காந்தியார் சுட்டு கொல்லப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன் !!





காந்தியார் சுட்டு கொல்லப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அவரை சாகடிக்க மாபெரும் சதி நடந்திருக்கிறது!

டெல்லி கன்னாட் சர்கிள் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நாதுராம் கோட்சே(பார்ப்பனர்) - நாராயண ஆப்தே(பார்ப்பனர்) -கோபால் கோட்சே?(பார்ப்பனர்) -மதன் லால் (பார்ப்பனர்)
விஷ்ணு கார்கோ -திஹம்பர் பெட்கே இவர்களால் சதி தீட்டப்பட்டது .

காந்தியார் அப்போது பிர்லா மாளிகையில் தங்கியிருக்கிறார் 1948 ஜனவரி 20ம் தேதி மாலை 5 மணிக்கு கொலை செய்வது என இவர்களால் தீர்மானிக்கப்பட்டது .

யார் யாருக்கு என்ன வேலை திட்டம் என்று வரையருக்கப்பட்டது அதன் படி 'மதன் லால்' காந்தியார் தங்கி இருக்கும் அறைக்கு வெளியே காம்பவுண்டு சுவரில் அமர்ந்துக்கொண்டு வெடிகுண்டை வீசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் !
அந்த நேரத்தில் காந்தியார் பேச இருக்கும் நடு ஹாலின் பின்பக்கம் உள்ள வேலைக்காரர்கள் தங்கி இருக்கும் அறையினுள் 'பாட்கே' 'கோபால் கோட்சே' இருவரும் அங்குள்ள ஜன்னல் வழியாக காந்தியார் மீது வெடிகுண்டை வீச வேண்டும் . இன்னொருவர் துப்பாக்கியால் சுட வேண்டும் . கூட்டத்தோடு கூட்டமாக உட்காந்திருக்கும் 'கார்கோ' என்பவன் காந்தி மீது குண்டை வீச வேண்டும் .. இதை எல்லாம் 'கோட்சே' மற்றும் 'ஆப்தே' இருவரும் கண்காணிக்க வேண்டும் .

திட்டமிட்டப்படி பிர்லா மாளிகைக்கு தனித்தனியே புறப்பட்ட இவர்கள் டாக்ஸி காரனுடன் பேரம் பேசுவதில் ஏற்பட்ட காலதாமதத்தினால் குறிப்பிட்ட நேரத்துக்குள் பிர்லா மாளிகைக்கு இவர்களால் போக முடியவில்லை .

ஒரு வழியாக போய் சேர்ந்தவர்கள் வேலைக்காரர் அறைக்குள் சென்ற பாட்கேவுக்கு ஒரே அதிர்ச்சி! அந்த அறையிலிருந்த வேலைக்காரானுக்கு ஒற்றைக்கண் .ஒற்றைக்கண் மனிதர் ஒரு அபசகுனம் என்பது இந்து தர்மம் .அதனால் பாட்கே காரியத்தை தொடராமல் பயந்து ஓடி வெளியே வந்துவிட்டான் .

இதற்குள் திட்டமிட்டபடி பிர்லா மாளிகையின் மதில் சுவரில் அமர்ந்திருந்த மதன்லால்
கூட்டத்தின் மீது குண்டை வீசிவிட்டான் .அந்த நேரத்தில் காந்தியார் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார் .இப்போது ஒரே கூச்சல் குழப்பம் ..போலீஸ் ஓடி வந்து மதன் லாலை பிடித்துவிட்டது.மற்றவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள் .

1948-ஜனவரி -மாலை 5 மணிக்கு இந்த காரணங்களால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்து விட்டது .பத்து நாட்கள் கழித்து (ஜனவரி -30ஆம் தேதி )அதே மாலை 5மணிக்கு அதே நபர்கள் சேர்ந்து காந்தியை சுட்டுக் கொன்றுவிட்டார்கள்!

இந்தக் கொலையிலும் -முதல் கொலை முயற்சியிலும் மேற்படி கொலைக்காரர்கள் தான் ஈடுபட்டிருந்தார்கள் .


தெரிந்திருந்தும் காந்தியாருக்கு ஏன் முன்கூட்டியே கடுமையான பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படவில்லை!விடை இன்றுவரை சரியாக கிடைக்கவில்லை!
காந்தியார் கொலையைப் பற்றி நடந்த விசாரணைக் கமிஷன் முக்கிய கோப்புகள் பல காணாமல் போய்விட்டது !காந்தியார் சாம்பல் போலவே
பல ரகசியமும் காற்றில் கரைந்து போய்விட்டது

No comments: