"தமிழின் வரலாறு"
தமிழினத்தின்
சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி
அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில்
திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம்
தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது
சிறப்பாகும். ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக,
தானே
முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே தமிழினத்தின்
சிறப்பு. இது குறித்து அறிய இதன் வரலாற்றை நான்கெனப் பகுத்து அதன் தோற்றத்தையும், தனித்துவத்தையும்
விரிவாகப் பார்ப்போம். அவையாவன..
மொழி வரலாறு
இலக்கிய
வரலாறு
இன வரலாறு
தமிழ் எழுத்து
வரலாறு
மொழியின்
தோற்றம்
ஒரு அமைப்போ,
சமுதாயமோ
தன் கருத்துக்களை பரிமாறிடவும், ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும்
அவசியம் தேவை மொழி. தமிழர்கள் பேசிய மொழி எக்காலத்தைச் சேர்ந்தது, என்கிற வினாவுக்கு
அறிஞருலகம் தெளிவாகவே விடை தருகிறது.
அகழ்வு
ஆய்விலும் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள், பாறை செதுக்கல்களில் உள்ள ஆதாரங்கள் கிடைத்த காலம்
வரலாற்றுக் காலமெனவும், சான்றுகள் இல்லாத பழமையான மக்கள் வசித்த இருப்பிடங்கள்,
அங்கு
கண்ட சீரற்ற கருவிகளால் கற்காலம் அதாவது கல்வி அறிவு,
சிந்திக்கும்
திறனற்ற வளர்ச்சியுறா காலத்தை பழைய கற்காலம்,
புதிய
கற்காலம் என பிரித்து வழங்கிடுவர்.
சிந்தனை
வளர்ச்சியே நாகரிக காலத்தின் தொடக்கம், அத்துடன் வேட்டை கருவிகளை சீராக
செப்பனிட்டுப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஏற்பட்டதுதான்
மொழித் தோற்றத்தின் காலமாகும்.
இவ்வாறான
மொழியின் தோற்றம் ஏற்பட பல்வேறு கட்டங்களை புதிய
கற்காலம் கொண்டிருந்தது. ஒலிகளைக் கூர்மையாக அறிந்து,
புரிந்து
கொள்வது தொடக்கமாகும். பின்னர் புள்ளினங்கள், விலங்குகளின் ஓசை
போன்றே தாமும் ஒலி எழுப்ப முயன்று ஒலியை வெளிப்படுத்தியது
ஒரு
கட்டம். இதனைக் கேட்பொலிக் காலம் என்பர்.
செவியால்
கேட்ட ஒலிக்குத்தக்கவாறு தாம் பார்த்ததை, கேட்ட ஒலிகளை
நினைவில் தேக்கி, சிந்தித்து மறுபடியும் அவற்றை கண்ட போதும், கேட்ட போதும் சக
மனிதருக்கு சுட்டிக் காட்டும் அல்லது அந்த உணர்வைப்
பகிர்ந்து கொள்ளும், பரிமாறிக் கொள்ளும் காலமே
சுட்டொலிக் காலம் எனலாம்.
கேட்பொலியின்
செழுமையும் சுட்டொலியின் பயனும் இணைந்த போது அழுத்தமான
சைகைகள் வாயிலாக உணர்வுகளை வெளிப்படுத்தும்
காலம் தோன்றியிருக்கலாம்.
கேட்பொலி,
சுட்டொலி,
சைகைகளுக்கு
பின் ஒரே விதமான ஓசை நயம் அச் சமூகத்தில் பகிர்ந்திடும் போது ஓசைகள் ஒரு வடிவாகி ஒரு மொழியாய் தோன்றியது. தமிழும்
இவ்வாறு தான் தோன்றியதாக மொழியியல் ஆய்வில் தன்னையே
ஒப்படைத்த தேவநேயப் பாவாணர் அவர்கள் கருத்துரைக்கிறார்.
இலக்கிய
தோற்றம்
மனித மனங்களில் தோன்றும் கருத்துக்களின் பரிமாற்ற சாதனமே
இலக்கிய பதிவுகள். இலக்கியம் என்பது எல்லோரும் அறியத்தக்க,
அறியவேண்டிய
ஒரு உண்மை போன்றதொரு கருத்து. அந்த
கருத்தைச் சொல்பவரின் மேதைத் தன்மை, மேதைமையுடன் இணைந்த
கற்பனை,
கற்பனையை
உருவகமாக்கும் ஒன்றைப் பற்றிய முழுமையான சேதி அறியும் ஆர்வம்.
இவைகளெல்லாம் ஒருங்கே சேர்ந்தால் தான் இலக்கியம் உருவாகும்.
இது போன்ற
தன்மை கொண்ட ஏராளமான இலக்கியங்கள் வேறெந்த இயற்கை மொழியிலும் இந்தளவுக்குப்
படைக்கப்படவில்லை. தமிழில்தான் உண்டு.
சங்க
காலத்திற்கு முன்பே இலக்கியம் என்பது இருந்துள்ளது. அக்காலப்புலவோர் புனைந்த பல பாடல்கள் வாய் மொழியாக, வழிவழியாகக் கூறி
இரசிக்கும் பண்பு மிகுந்திருந்தது. பின்னர் வாய்மொழி இலக்கிய
காலத்தின் சீரிய மேம்பாடாக உருவானது பதிவு
செய்து பாதுகாக்கும் ஏட்டிலக்கிய காலமாகும்.
ஏட்டிலக்கிய
காலம் தொடங்கி பலநூறு ஆண்டிற்குப் பின் அறிவியல் மேம்பாட்டால் ஒரு சுவடி இலக்கியம் ஆயிரக்கணக்கான நூல் பிரதியாக
மாறியது. இது இலக்கியப் பதிவு காலமாகும்.
இவ்வாறான
இலக்கியப் பதிவின் போதுதான் மூல ஏட்டுச் சுவடிகள்
பலவும் பதிப்பிக்கப்பட்டதுடன் மூல இலக்கியங்களுக்கு விளக்கவுரை, பதிப்புரை, பதவுரை என இலக்கியத்
தளம் வாசிப்பிற்கு எளிதானது. தமிழின் சங்க
இலக்கியம் அனைத்தும் செய்யுள் வடிவங்கள்.
இச் செய்யுள் வடிவ இலக்கியங்களுக்கு குறுகிய அடிகளைக் கொண்ட
தனிப்பாடல்கள், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக்
கொண்ட பாடல்கள், தொடர் நிலைச் செய்யுளாக வரும் காப்பியங்கள் எனப்பல
வகையுள்ளது.
இச்செய்யுள்களை
படைக்கும் புலவர்கள் அதற்கென வகுக்கப்பட்டுள்ள இலக்கண
நெறிகளைக் கையாண்டுள்ளனர். அந்த இலக்கண நெறிகள்
இன்றும் கையாளப்பட்டு மரபு செய்யுள்களில் பாடல்கள் புனைகின்றனர்.
விருந்தே
தானும்
புதுவது
கிளந்த யாப்பின் மேற்றே
என
தொல்காப்பியர் யாப்பு எனும் செய்யுள் படைப்புக்கு நெறிவகுக்கிறார். இதனால் எத்துறையாயினும் தமிழ் மொழியை அத்துறைக்கு
ஏற்றவாறு பயன்படுத்திட இயல்கிறது.
இனத் தோற்றம்
மொழிதான் ஒரு இனத்தின் மூலம் மொழியைப் பயன்படுத்தும் இனக் குழுக்களை
வகைப்படுத்தும் போது அம்மொழி பேசும்
கூட்டம், சமூகம், நாட்டவர்கள் என்கிற பல உள்ளார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனம் அடையாளம்
காணப்படுகிறது.
இனங்கள்
பேசும் மொழி இரு வகைப்படும் ஒன்று இயற்கை மொழி பிரிதொன்று உருவான மொழி.
இயற்கை மொழி
பலவும் மனித இனத்தொடக்க காலத்திலிருந்து மக்கள் பயன்பாட்டில் இருப்பது.
உருவான மொழி
பல இனத்திலிருந்து பிரிந்தவர்கள் கூடி தமக்குள் ஒரு பரிமாற்ற சாதனமாகப் பயன்படுத்தும் பொருட்டு உருவாக்கிக் கொள்ளும்
மொழி. காட்டாக ஆங்கிலத்தைக் குறிப்பிடலாம்.
தமிழர்
தமிழைத் தங்கள் மொழியாகக் கொண்டதால் தமிழினம்
என சுட்டப்படுகிற்து. இயற்கை மொழிக் குடும்பத்தில் தமிழ் பழமையானது.
அதன் பழமையின் கால அளவைத் தெளிவாக வரையறை செய்ய இயலாத அளவுக்கு பல்லாயிரம்
ஆண்டுகால மனித நாகரீக காலத்தின் வரையரைகளான பழங்கற்காலம்,
புதிய
கற்காலம் என்பவற்றோடு தொடர்புடையது.
மானுடவியல்
ஆய்வாளர்கள் உலகளவிலான மானுட சமூகத்தை நான்கு பிரிவாக பிரித்து அறிவித்துள்ளனர்.
1.திராவிட இனம்
2.ஆப்பிரிக்க இனம்
3.மங்கோலிய இனம்
4.ஐரோப்பிய இனம்.
மேற்காணும்
இந்த நிலஅளவிலான இனக்குழுக்களின்அடையாளம் உடல் அமைப்பு, தலைமயிரின் வடிவம்,
தோலின்
நிறம், முக அமைப்பு என்கிற பன்முகத் தன்மையான ஆய்வில் மூலமாக
விளங்கும். இந்த நான்கு இனப்பிரிவுகளில் தனித்த, ஒன்றுடன் ஒன்று கலந்த மனித இனங்களே இன்று உலகெங்கும் உள்ளனர்.
அந்த வகையில் க்வார்ட்ஸ் எனப்படும் இயற்கையாக நிலத்தில் உருவாகும்
தனிமமான படிகக் கற்களை பழங்கால திராவிட
இனம் பயன்படுத்தத் தொடங்கியது. நிலத்தில் விளையும் இந்த படிகக் கற்கள்
உறுதியாகவும், கூர்மையாகவும் விளங்கத்தக்கது. இதனைப் பயன்படுத்திய காலமே பழங்கற் காலம். உலகில் அதே சமயம்
பிற இனமக்களும் ஆங்காங்கு நிலத்தில் கிடைத்திட்ட கூர்மையான
கூழாங்கற்கள், பாறைக் கற்களை வேட்டைக்குப்
பயன்படுத்தினர்.
தொடக்க கால
மனிதன் கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தி, பின்னர் பிரிதொரு
கற்களால் ஏனைய ஆயுத கற்களைத் தயாரிக்கும்
நிலைக்கு உயர்ந்தனர். இக்காலத்தை வரலாற்றாய்வாளர்கள் "லெவ்ல்லோசியன்"
என்பர். வேட்டைக் கருவிகளை க்வார்ட்ஸ் கற்களில் தயாரிக்கத் தொடங்கிய திராவிட இனம் காலப்போக்கில் இதர பயன்பாட்டுக்
கருவிகளையும் செய்யும் ஆற்றல் பெற்றது. திராவிடர்களின்
நுண்ணறிவுத் திறன் வளர வளர கருவிகள் மட்டும்
சீராகவில்லை, அவர்கள் உச்சரிக்கும் மொழிகளும் சீராகத் தொடங்கியது.
இவ்வாறுதான்
திராவிட இனக் குழுக்களில் மூத்த மொழியான தமிழ் பேசப்பட்டு
பெரியதொரு மனித இனத்தின் பயன்பாட்டில் விளங்கியது. காலப்போக்கில் திணை
நிலங்களின் தன்மைகளுக்கேற்றவாறும் உணவிற்காகவும் நீர் நிலைகளை நாடி இடம்
பெயரத் தொடங்கினர். இவ்வாறு இடம் பெயர்ந்து இந்தியா எங்கும் பரவிய
திராவிட இனம், மூல மொழியான தமிழுடன் வேறு வகை ஒலிகளையும் சேர்த்து பிரிதொரு மொழிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியது.
திராவிட மொழிக் குடும்பத்தை மொழியியலார். தென் இந்தியத்
திராவிடமொழிகள், மத்திய இந்திய திராவிட
மொழிகள், வடஇந்திய திராவிட மொழிகள் எனப் பகுப்பார்கள். தென்னக திராவிட மொழிகளை இரண்டு பகுதியாக
நோக்கப்படுகிறது. இலக்கிய வளமுள்ள திராவிட மொழிகள்.
இலக்கிய வளமில்லா திராவிட மொழிகள் என இதனை வரையறை செய்கின்றனர்.
தமிழ்,
தெலுங்கு,
கன்னடம்,
மலையாளம்
போன்றவை இலக்கிய வளமிக்கவை.மலையின திராவிட மக்களால்
பேசப்படும் தோடா, கோத்தர், படுகு, கேடகு, துளு, வர, கொலமி, நயினி முதலான
மொழிகள் பேசப்படினும் இலக்கிய வளம் இல்லாதவை.அதே
போன்று பலுகிஸ்தானில் திராவிட பழங்குடி மக்களால் பேசப்படும் பிரோகுய்,
மத்திய
இந்தியாவில் பேசப்படும் பர்ஜி, ஒல்லரி, குய்யி, கோண்டி, பென்கோ, குவி, போர்ரி, கோய், குரூக், மோஸ்ரா முதலிய
தொன்மை திராவிட மொழிகள் பேச்சு வழக்கில்
உள்ளதேயன்றி இலக்கிய வளம் இல்லாதவை.
பெருங்கற்காலத்
தொடக்கத்திலேயே திராவிட மொழிகளின் தாயான தமிழ் சீரிய பயன்பாட்டில்
விளங்கியுள்ளது. அச்சமயம் பதிவு செய்திடும் சாதனமோ, வழிமுறைகளோ, அதனை உருவாக்கும்
சிந்தனையோ எழவில்லை. காலப்போக்கில் பாறைகளைப் பண்படுத்தும்
நுட்பம் அறிந்த வெகுகாலத்திற்குப் பின்புதான் பாறையில் செதுக்கத் தொடங்கி
இருத்தல் கூடும். இந்தப் பதிவுகளைச் செய்திடும் முன்பு தமிழ் மொழி
மனங்களிலும், மனத்திரைகளிலும் நினைவாற்றல் எனும் திறனாலேயே பதிவு செய்யப்பட்டன. மனித மனம் ஒன்றை அறிந்தவுடன் அதனை
மறவாமல் நினைவில் நிறுத்தும் பொருட்டு இயல்பான இலக்கண
சூத்திரங்கள் தமிழ் மொழியில் அன்றே பயன்படுத்தியுள்ளனர்.
திராவிட
மொழிக் குடும்பத்திலிருந்து பலமொழிகள்
பிரிந்தாலும் மூலமொழியான தமிழ் இன்றளவும் தன் நயத்தை இழக்காமல் என்றும் இளமையாக விளங்கக் காரணமே அதன் இலக்கண
கட்டமைப்புதான்.
இயற்கை மொழியாம் தமிழ் தன் குடும்பத்திலிருந்து பிற திராவிட
மொழிகள் பிரிந்த போதும் எவ்வித மாற்றமும் இல்லாமல் எத்தகைய
மாற்றங்களுக்கு தன்னை ஆட்படுத்திக்
கொள்ளும் வகையில் உரிய கட்டமைப்புடன் இயங்குவதால் கி.மு.ஆயிரமாவது
ஆண்டுகளில் அதாவது கற்காலப் பண்பாட்டின் இடைக் காலத்திலேயே கிளை மொழிகள் பிரிந்தாலும் தனித்துவமாக இன்றும் துலங்கி
வருகிறது.
இவ்வாறு மொழி
மட்டுமே துலங்கவில்லை. தமிழும் அதைப் பேசும் தமிழினமும் உலகெங்கும் பரவி உலக
மொழிகளில் தனக்கென ஓர் உன்னதமான நிலையை அடைந்துள்ளது. தமிழ் மொழியின்
வளர்ச்சிதான் தமிழினத்தின் வளர்ச்சியும் என்பது நோக்கத்தக்கது.
வரிவடிவ
வரலாறு
தமிழ் எழுத்துக்கள் இன்றைய வடிவிற்கு மாற்றம் காண பல
நூற்றாண்டுகளைக் கடந்தன. ஒலியாய் விளங்கிய
பேச்சுத் தமிழ் மொழி வரிவடிவாய் உருப்பெற்றிட்டது எக்காலம் எனும்
ஆய்வு இன்னமும் தொடர்கிறது. எனினும் (ஒலியை வரிவடிவமாக்கும் திண்மை, அச்சிந்தனை எக்காலத்தில் உருவாகி இருக்கலாம்
என்று யூகிப்பதற்கும் அந்த யூகங்கள் நிலை
பெற்றிடவும் ஏராளமான சான்றுகள் அகழ்வு ஆய்வுகளில் கிடைத்துள்ளன.)
பொதுவாக தமிழ்
எழுத்து வரிவடிவத்திற்கான சிந்தனை வடக்கிலிருந்து
தென்னகமாம் தமிழ் நிலத்தில் புகுந்ததாக பல வரலாற்று தொல்லியலார்
கூறுகின்றனர். எனினும் பேரறிஞர் பாவாணரின் கூற்றுப்படி மனித நாகரீக தோற்றமே தென்னகத்தில் தான் நிகழ்ந்தது. எனவே
எத்தகைய ஆய்வுகளும் இங்கிருந்து தான்
தொடங்க வேண்டும் என்கிறார். இது குறித்து அவர் கூறியது
"ஒரு வீட்டிற்கு ஆவணம் போன்றதே ஒரு நாட்டிற்கு உரிமை
வரலாற்று சான்றாகும்.ஆயின் ஓர் ஆவணத்தில் எதிரிகளால்
ஏதேனும் கரவடமாகச் சேர்க்கப்படலாம். அது போன்றே ஒரு நாட்டு
வரலாறும் பகைவரால் அவரவர்க்கு ஏற்றவாறு
மாற்றப்படலாம். ஆதலால் இவ்விரு வகையிலும் உரிமையாளர் விழிப்பாயிருந்து
தம் உரிமையைப் போற்றிக் காத்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்.
இவருக்கு
முன்னோடியாக பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பி.டி.சீனிவாசய்யங்கார், வி.ஆர்.இராமச்சந்திர
தீட்சிதர் போன்ற அறிஞர் பெருமக்களும்
கூறியுள்ளனர்.
இவர்கள்
கூற்று மெய்யே என்பது போல் அரிக்கமேடு, உறையூர் தொடங்கி
ஈழம் வரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் காணப்பட்ட திராவிட
வரிவடிவம் தமிழே என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரிக்கமேட்டில்
கிடைத்த பொருட்களில் பொரித்துள்ள எழுத்து வரி உருக்கள் கி.பி.முதல்
நூற்றாண்டுக்கும் முன்னம் பொரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதே
போன்ற எழுத்துருக்கள் ஈழத்தில் நிகழ்ந்த அகழ்விலும் கண்டறிந்துள்ளனர்
என்பதை இலங்கை வரலாற்று அறிஞர் கருணா இரத்தினா சுட்டிக் காட்டுகிறார்.
புத்தர்
காலத்திற்கு முன்பே கி.மு.5ஆம் நூற்றாண்டில் அதாவது
அசோகரின் காலத்திற்கு சில நூற்றாண்டிற்கு முன்பே திராவிட நிலத்தில்
வழக்கிலிருந்த மொழிகளைப் பற்றியும் வரிவடிவங்கள் பற்றியும் அசோகர்
காலத்து பவுத்த நூலான லலிதவிஸ்தாரம் அன்றைக்கு வழக்கில் இருந்த பிராமி,
திராவிட
வரிவடிவங்களுடன் மொத்தம் அறுபத்து நான்கு வரிவடிவம் காணப்பெற்றதாகக்
கூறுகிறது. அதைப் போன்றே சமண நூல் சமவயாங்க சூக்தமும், பன்னவான சூக்தமும்
கி.மு.5ஆம் நூற்றாண்டில் பதினெட்டு வரிவடிவம் காணப்பட்டதாகவும்
அதில் திராவிடமும் ஒன்று எனக் கூறுகிறது.தமிழ்கத்திலும், ஈழத்திலும்
காணப்பட்ட தமிழ் வரிவடிவங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்திருந்தன
என்கிறார்
ப்யூலர் எனும் அறிஞர்.
தமிழின்
தொன்மை வரிவடிவம் தொடர்பான ஆய்வுகள் 19ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில்தான் பெருமளவு தொடங்கின. தொடக்கத்தில்
கல்வெட்டு, பாறை செதுக்கல் வரிவடிவங்களைப் படித்து விளக்கம் கூறி ஆய்வுக்கு வழிவகுத்தவர் பிரின்செப் எனும்
ஆய்வாளராவார். இவ்வாறு ஆய்வில் வெளிப்பட்ட
பல உண்மைகளை மேலும் தெளிவாக அறிஞர்கள் ஆய்வு செய்து ஒரு பட்டியலை
வெளிட்டுள்ளனர். அதில் காலம் தோறும் தமிழ் வரிவடிவம் அதைப் பதிவு செய்யும் பொருட்களையொட்டி மாறுதலைக் கண்டே வந்துள்ளதை
படத்தில் காண்க.
19ஆம் நூற்றாண்டு வரையுள்ள இந்த வரிவடிவங்கள். 17ஆம் நூற்றாண்டில் அச்சேறிய போது சுவடி எழுத்துக்களை ஒட்டியே காணப்பட்டன.
பின்னர் வீரமா முனிவர் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள
எழுத்தில் சீர்மை கண்டவுடன் தமிழின் வரிவடிவம் மேலும்
அழகு பெற்றன. அது மேலும் ஹண்ட் எனும் அச்சுவியலாளரால் செம்மையாக ஈய
அச்சுருக்களின் உதவியால் அதன் மொத்த வடிவமும் ஓர் உலகார்ந்த கட்டமைப்புக்குள் உருப்பெற்றது. காலங்கள் மாறிடினும்
இன்று கணியத்தில் அழகுற தமிழ் தன் இளமையான தோற்றப் பொலிவுடன்
விளங்கி வருகிறது.
- முகநூல் இருந்து -
No comments:
Post a Comment