Translate

Saturday, July 28, 2012

PIchai Pathiram Nan kadavul HD Quality


பிச்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே என் அய்யனே 

யாம் ஒரு பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே என் அய்யனே 

பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய 

உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் 

அய்யனே என் அய்யனே 

பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய 

உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் 

அய்யனே என் அய்யனே (பிச்சைப்பாத்தி

 
அம்மையும் அப்பனும் தந்ததா 

இல்லை வியாதியின் வல்வினை சூழ்ந்ததா 

அம்மையும் அப்பனும் தந்ததா 

இல்லை வியாதியின் வல்வினை சூழ்ந்ததா 

இன்மையை நான் அறியாததால் 

இன்மையை நான் அறியாததால் 

சிறு பொம்மையினில் உண்மையை உணர்ந்திட... 

பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் அய்யனே என் அய்யனே... (பிச்சைப்பாத்தி

 
அத்ததை செல்வமும் உன்னிடத்தில்  

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 

அத்ததை செல்வமும் உன்னிடத்தில்  

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில் 

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில் 

அதன் சூத்திரமே யது உன்னிடத்தில் 

ஒரு முறையா இருமுறையா 

பல முறை பல பிறப்பெடுக்கவைத்தாய் 

புது வினையா பழவினையா 

கனம் கனம் தினம் எனைக் குடிக்கவைத்தாய் 

பொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற வாழ்க்கையும் 

துறந்ததே உன் அருள் அருள் அருள் என்று 

அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே 

அருள் விழியால் நோக்குவாய் 

மலர் பதத்தால் தாங்குவாய் 

உன் திருக்கரம் எனை அனைத்துனதருள் பெற 

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே 

பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய 

உடம்பு எனும் பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் 

அய்யனே என் அய்யனே
Lyricist: Illayaraja
        

No comments: