Translate

Friday, July 27, 2012

பழங்களால் பொலிவாகும் சருமம்!

பழங்கள், காய்கறிகளில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. தினசரி பழங்கள், காய்கறிகளை சாப்பிடுபவர்களுக்கு சருமம் பளபளப்பாகும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். பழங்கள் உடம்பில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. ஆரோக்கியத்தோடு சருமத்தை அழகாக்கும் பழங்களைப் பற்றி பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
வாழைப்பழம்
நம் நாட்டில் அனைத்து சீதோஷ்ணநிலைகளிலும் வாழைப்பழம் கிடைக்கும். இதில் உயர்தர வைட்டமின்களான ஏ, பி, மற்றும் இ காணப்படுகின்றன. இது முகச்சுருக்கத்தைப் போக்கி இளமையை தக்கவைக்கும். வாழைப்பழத்தை நன்கு மசித்து பேஷியல் போடலாம் சருமம் பொலிவாகும்.
எலுமிச்சை
இந்திய சமையலில் எலுமிச்சைக்கு முக்கிய பங்குண்டு. இதில் அடங்கியுள்ள வைட்டமின் சி சத்து சருமத்தை அழகாக்கும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகிவர சருமம் ஆரோக்கியமடையும். தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து சருமத்தில் பூசி உலரவைத்து குளிக்கலாம். சருமம் பளபளப்பாகும். இயற்கை பிளீச் ஆக செயல்படும்.
ஆப்பிள்
தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போகவேண்டிய அவசியம் இல்லை என்பார்கள். ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ஸ் சருமத்தை பொலிவாக்குகிறது. இறந்த செல்களை நீக்குவதோடு புதிய செல்களை உருவாக்கும்.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்சு பழத்தில் உள்ள உயர்தர வைட்டமின் சி சருமத்தை பாதுகாக்கிறது. ஆரஞ்சு தோலினால் சருமத்தை தேய்த்து உலரவைத்து பின்னர் குளிக்கலாம். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். ஆரஞ்சு தோலினை உலரவைத்து பொடி செய்து ஸ்கிரப்பராக உபயோகிக்கலாம்.
பப்பாளி
பப்பாளிப் பழம் உயர்தர ஆன்டிஆக்ஸிடென்ட்களை கொண்டுள்ளது. பப்பாளியில் உள்ள பப்பைன் என்ற என்சைம் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. அதேபோல் மாம்பழத்தில் உள்ள உயர்தர ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ், வைட்டமின் ஏ சத்து முதுமைக்கு எதிராக போராடுகிறது. செல்களை புதுப்பிக்க உதவுகிறது.

No comments: