இன்னும் என்ன Thøzha எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே !!
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே.. !!
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!!
வந்தால் அலையாய் வருவோம் !!
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம் !!
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே.. !!
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக.. !!
இன்னும் என்ன Thøzha எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே !!
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளை செய்வோமே !!
மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால்
நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம் !!
தொடு வானம் இனி தொடும் தூரம்
பல கைகளை சேர்க்கலாம்
விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால்
அதில் கள்ளிப்பூ முளைக்குமா?
நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும்
தந்த வீரங்கள் மறக்குமா?
ஒரே மனம் !! ஒரே குணம் !!
ஒரே தடம் !! எதிர் காலத்தில்..
அதே பலம் !! அதே திடம் !!
அகம் புறம் நம் தேகத்தில்..
கழுதோடும் ஒரு ஆயுதத்தை
தினம் கணங்களில் சுமகிரோம்
எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை
எங்கள் மொழியினில் சுவைகிரோம்
பனி மூட்டம் வந்து படித்தென்ன
சுடும் பகலவம் மறையுமா?
அந்த பகை மூட்டம் வந்து பணியாமல்
எங்கள் இரு விழி மூடுமா?
இதோ இதோ இணைந்ததோ இடம் இடம் நம் கையோடு
அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு
யாரும் இல்லை தடை போட
உன்னை மெல்ல எடை போட..
நம்பிக்கையில் நடை போட சம்மதமே..
என்று இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே..
இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக..
இளமை படையே வருக.. எழுக..
Lyrics: Pa. Vijay
Composer: Harris Jayaraj
Singers: Balram, Naresh Iyer, Suchith Suresan
No comments:
Post a Comment