Translate

Friday, June 22, 2012

வெட்டிவேர்.


ஒரிசாவில் நான் நீர் மேலாண்மை துறை பணிக்காக ஆறுகளில் இருந்து நீர் இறைப்பான் மூலமாக நீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது மண் அரிப்பை தடுக்கும் வெட்டிவேரின் அருமையை உணர்ந்து இருக்கிறேன் ,

பண்டைய காலத்தில் தமிழர்களின் நீர் மேலாண்மையை பற்றி நிறைய படித்தும் பார்த்தும் இருக்கிறோம் ,

குறிப்பாக

(நன்றி : கீற்று http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13094%3A2011-02-19-03-53-11&catid=1270%3A10&Itemid=534)

குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியனிடம், “வானவாரி நிலம் மிகப் பரந்த அளவில் உடையதாக இருந்தாலும் அது ஓர் அரசனுக்குப் பெருமை தராது. ஆதலால், நிலம் குழிவாக உள்ள பகுதியில் நீண்ட நெடிய கரை அமைத்து நீரைத் தேக்க வேண்டும். இவ்வாறு நீரைத் தேக்கியவரே இந்த உலகத்தில் தங்கள் புகழைத் தளைத்தவராவர்” (புறம். 18) என்று கூறுகின்றார். குளம் தொட்டு வளம் பெருக்குவதே மன்னன் கடமை என்று பட்டினப்பாலையும் வலியுறுத்துகின்றது (284). ‘மழை பிணித்துஆண்ட மன்னன் என்று பாண்டியனைச் சிலப்பதிகாரம் போற்றுகின்றது.



தமிழில் நீரைத் தேக்கும் அமைப்புத் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன. நீரின் போக்கையும் நிலத்தின் தன்மையையும் அறிந்து நம் முன்னோர் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தினர். இரண்டு பக்கப் பாறைகளை இணைத்து எட்டாம் நாள் பிறை போன்று குளக்கரை அமைத்தனர் (புறம். 118). கல்கொண்டு அணை கட்டப்பட்டதை வருவிசைப் புனல் கற்சிறை போல் ஒருவன் தாங்கிய பெருமையாலும்’ (தொல். பொருள். 65) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறிகின்றோம். ------------------------------------------------


இந்த நிகழ்வுகளின் உச்சத்தை ஒரிசாவில் தெலுங்கு சோழர்களுடன் தொடர்புடிய சோன்பூர், பவானிபட்டினம், பகுதிகளிலும்

சோழ கங்கர்கள் ஆண்ட பல இடங்களிலும் கண்டு இருக்கிறேன்



நிலத்தை முறையாக அளந்தவர்கள் என்ற பட்டம் சோழர்களுக்கு உண்டு அதையும் ஒரிசாவில் பார்த்து இருக்கிறோம் இன்றும் தமிழர்களின் கோல் என்ற அளவு முறை தான் ஒரிசாவில் இருக்கிறது



ஒரிசாவில் இன்றும் வெட்டிவேரின் பயன்பாடுகள் எல்லா அணைகளிலும் உள்ளது


எவ்வளவு உயரமான கற் சிறைகளையும் தாங்கி நிற்கும்

இன்று மேலை நாட்டின் தாக்கத்தில் நாம் சிமெண்ட் பயன் படுத்துகிறோம்


ஆனால் தமிழகத்தின் இந்த அறிவு சார் முறையை இன்று அமெரிக்காவில் காப்பு உரிமையை பெற்று அதை உலகமெங்கும் வெட்டிவேர் என்ற பெயரில் பயன் படுத்தும் கொடுமையை எங்கே சொல்வது


தென் அமெரிக்காவில் வெட்டிவேர் என்ற பெயர் பயன் பாட்டில் இருக்கிறது


இன்று வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள் நம் தொழில் நுட்பத்தை நமது பேரிலேயே பயன் படுத்துவது நம்மில் பலருக்கு தெரியாமல் போவது ஏன் என்றே தெரியவில்லை


http://www.vetiver.org/



http://www.google.co.in/imgres?imgurl=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_oTSv6JHKUZM%2FTQ6SaGqJ86I%2FAAAAAAAALG4%2Fhm19vueJyM0%2Fs1600%2FImage_046a.png&imgrefurl=http%3A%2F%2Fvetivernetinternational.blogspot.com%2F2010%2F12%2Fvetiver-system-and-soil-erosion.html&usg=__skS6fong7lMoaAbVxzmC6xtvIVY%3D&h=310&w=433&sz=265&hl=en&start=3&zoom=1&tbnid=beW1eCvgtkREOM%3A&tbnh=90&tbnw=126&ei=QxLlT4LNHYnPrQeJ49j0CA&prev=%2Fsearch%3Fq%3Dvetiver%2Bin%2Bsoil%2Berosion%26um%3D1%26hl%3Den%26gbv%3D2%26tbm%3Disch&um=1&itbs=1



இயற்கை உலக மக்களுக்கு பொதுவானது ஆனால்

அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்களை

நாம் அவர்கள் யாராக இருந்தாலும் நினைவில் கொள்ள வேண்டும்



இங்கே வந்து கற்று செல்பவர்கள் அதை உலகமெங்கும் கொண்டு சென்று பணமாக்கும் போது நம்மை நினைவில் கொள்ள வேண்டும்


இதை ஆய்வு செய்து நான் சொன்னால் என் மேல் பாய்கிறார்கள்


என் ஆய்வுகளின் பயன்பாடுகள் வரலாறை நினைவு படுத்துவது மட்டும் அல்ல ,அதை நம் சந்ததியினர்

பயன்பாட்டிற்கு எப்படி கொண்டு வர போகிறோம் என்பதிலும் இருக்கிறது


பின் குறிப்பு



://mooligaivazam-kuppusamy.blogspot.in/2007/12/blog-post_11.html

வெட்டிவேர்.



1) மூலிகையின் பெயர் -: வெட்டிவேர்.


2) வேறுபெயர்கள் -: குருவேர், உசிர், வீராணம்.



3) தாவரப்பெயர் -: CHRYSOPOGON ZIZANIOIDES.



4) தாவரக்குடும்பம் -: POACEAE.



5) தாவர அமைப்பு -: இது அனைத்துவகை மண்ணிலும் வளரும்.வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல்வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது. இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு. இது உடலின் வேர்வையும், சிறு நீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.இது லெமன்கிரேஸ், பாம்ரோஸா புல் போன்று வளரும். வெட்டிவேர்மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும்.


6) பயன் தரும் பாகம் -: வேர் மட்டும்.


7) மருத்துவப் பயன்கள் -: வெட்டி வேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உச்சாகத்தையும் தரக்கூடியது. வெட்டி வேர் சிறந்த மருத்துவப் பயனுடையது. இதிலிருந்து எடுக்கப் படும்.தைலமும் நறு மணம் கொண்டது. இதனை மணமூட்டியாக தைலங்களிலும். குளியல் சோப்புகளிலும், பயன் படுத்துவதுண்டு. இந்த எண்ணெய்யை கை,கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் தெரியும்.இது காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும்.

வெட்டி வேரை நன்கு உலர்த்தி பொடிசெய்து கொண்டு 200 மி.கி. முதல் 400 மி.கி. அளவு எடுத்து நீரில் ஊறப்போட்டு அந்த ஊறல் நீரை 30 மி.லி. முதல் 65 மி.லி. அளவு வீதம் அருந்தி வர காச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்கள் கட்டுப் படும்.




வெட்டி வேரைக்கொண்டு செய்யப்படும். விசிறியைக் கொண்டு வீசி வர உடல் எரிச்சல், நாவறட்சி தாகம், இவை நீங்கும். மனம்மகிழ்ச்சிய்ம் உண்டாகும்.
கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தைக் குறைத்து மனத்தையும் குளிர்சியையும் தரும்.




வெட்டிவேரை இரண்டுபிடி எடுத்து ஒரு மண் பாண்டத்தில்போட்டு நன்கு காச்சிய சுடுநீரில் திருநீற்றுப்பச்சை விதையைப்போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல், தாது நஷ்டம், கழுத்துவலி, கோடைக்கொப்பளங்கள், சொட்டுச் சொட்டாக சிறுநீர் இறங்குதல்முதலிய உஷ்ண வியாதிகள் யாவும் தணியும். வெட்டி வேரைக்கொண்டு குழித்தைலம் இறக்கி அதனை 1 முதல் 2 துளி சர்கரையில் கலந்து கொடுக்க வாந்தி பேதி குண்மாகும்.




கோடைகாலத்தில் நீர் எரிச்சல், தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, முதலிய நோயால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டுஅதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்துவெந்நீரில் 200 மி.கி. அருந்தி வர குணம் தெரியும். வெட்டிவேரை இருக்கைகளிலும், குடிநீரில் போட்டும் பயன் படுத்துகிறார்கள்.

No comments: