Translate

Wednesday, June 27, 2012

மஞ்சளின் மகிமை...




பல நூறு ரூபாய்கள் கொடுத்து அழகுசாதனப் பொருட்களை வாங்கி அவதிப்படுவதற்குப் பதில், நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் மஞ்சளைப் பயன்படுத்தி அழகாகும் வழிகளைப் பார்ப்போமா...

* காயாத மஞ்சள் கிழங்கை, அதன் இலையுடன் சேர்த்து அரைத்து பாசிப்பயறு மாவுடன் கலந்து தினமும் உடலில் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கம் வராது.

* கழுத்து, கணுக்கால், முட்டி... போன்ற இடங்களில் கருப்பாக இருக்கிறதா? காயாத மஞ்சள் கிழங்கை அரைத்து, தயிருடன் கலந்து கருப்பாக இருக்கும் இடங்களில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவர, கருமை போயே போச்...

* முகப்பரு பிரச்னையா? காயாத மஞ்சள் கிழங்குடன் வேப்பிலையை அரைத்துப் பூசி, 15 நிமிடங்கள் ஊற விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் பரு சீழ் பிடிக்காது. வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்துவிடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.

* காயாத மஞ்சள் கிழங்கு ஒன்று, ஒரு எலுமிச்சை இலை - இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால், பளிச்சிடும் நிறம் கிடைக்கும். இதனுடன் 2 வேப்பிலையையும் சேர்த்துக் கொண்டால், அழகிய நிறத்தோடு கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.

* முழு பாசிப்பயறு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள், கசகசா - தலா 10 கிராம், உலர்ந்த ரோஜா மொட்டு, பூலாங்கிழங்கு - தலா 5 கிராம், எலுமிச்சை இலை, துளசி இலை, வேப்பிலை - மூன்றும் சேர்ந்து 2 கிராம் - இவற்றை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதில் சிறிதளவு எடுத்துத் தயிரில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவுங்கள். மாசற்ற பொன்முகத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள்தான்!

No comments: