Translate

Thursday, June 14, 2012

வர்மம் , ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .



வர்மம் , ஆதித் தமிழன் படைத்த அற்புதமான
கலைகளில் ஒன்று . இன்று உலக நாடுகள்
எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி
அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும்
வேளையில் , இருக்கும் இடத்திலே இருந்து 1000
கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த
ஆயிதமும் இல்லாமல் தாக்கக் கூடிய ஆபூர்வக்
கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு
தெரியுமா ? இந்த வர்மம் கலை ஒரு கடல் இதை
பற்றி எழுத ஒரு பக்கம் போதாது . அதனால்
சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு
தெரிவிக்கிறேன் .


இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான அகத்தியர் .
இது உருவான இடம் பொதிகை மலை ." தென் பொதிகை நாதன் துணையால்
பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி .மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி
வரியே இதற்கு சாட்சி !.
அகத்தியர் கற்பபித்த வர்மகலைகளில்
• அகத்தியர் வர்ம
• அகத்தியர் வர்ம
• அகத்தியர் ஊசி முறை வர்மம்
• அகத்தியர் வசி வர்மம்
• வர்ம ஓடிவு முறிவு
• அகத்தியர் வர்ம கண்ணாடி
• வர்ம வரிசை
• அகத்தியர் மெய் தீண்டாகலை
ஆகியவை குறிப்பிடத்தக்கவை . "ஜடாவர்மன் பாண்டியன் " என்ற மன்னன் தான்
இதில் வல்லவனாக திகழ்ந்தான் . பின்னர் பாண்டிய இனம் அழியத்தொடங்கியதும் ,
இந்த கலையும் ஆழியத் தொடங்கியது. இதற்கு பின்னர் வந்த " சோழர்கள் " இதனை
கற்றனர் .
பின்னர் , இத கலை இலங்கை , சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது .
காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்த மதத்தை பரப்ப சீனா செல்லும்
போது இந்த கலையும் அங்கு பரவியது . டெண்ஜிக்கு நரநோககு என்ற சீன வாசகத்தை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் " the fighting techniques to train the body from india "

என்ற பொருளை தருகின்றது ." ஹீ ஷிஹ" என்ற அமெரிக்காவுக்கான சீன தூதர் " இந்தியா
ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது " என கூறி உள்ளார் . 1793 இல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது , தாங்கள் இந்த கலை மூலமாக பாதிக்கப் படக்கூடாது
என்பதற்காக தமிழக இளைஞர்களை இந்த கலை பயில்வதை தடை செய்தனர் . அன்று ஆரம்பமான இந்த கலையின் அழிவு , இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது !
இந்த கலையானது அனைவருக்கும் கற்று தர மாட்டது . இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்று தருவார் ! இந்த கலையின் மூலம் ஒருவர் தாக்கபட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறை கையாள வேண்டும் என “ அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே “ என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன. இதை எந்த வயதினரும் கற்கலாம் ! 


வர்மக் கலைகளின் வகைகள்
• தொடு வர்மம்
• தட்டு வர்மம்
• நோக்கு வர்மம்

• என வகை படுத்தப்பட்டுள்ளது , தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பதிப்பை உணர மாட்டார் . இதை உணர்வதற்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்த பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாததிலோ, அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும்! படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும். தட்டு வர்மம் யாருக்கும் கற்று தரப்படமாட்டாது. இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும். நோக்கு வர்மம் தான் அனைத்திலும் உச்சமானது யாரையும் தொடாமல் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும்! உதாரனத்திற்கு சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தாலம் ! ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரை தாக்கும் வல்லமை கொண்டது இந்த கலை, ஆனால் இது யாருக்கும் கற்று தர படமாட்டாது. ஆசான் தன் மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் மட்டுமே இதை கற்காலம்.
தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் என்க்கு தோன்றுகிறது. இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது ஓவ்வொரு தமிழனின் கடமை. இனியாவது விழித்துக்கொள்வோம் !


 

No comments: