Translate

Tuesday, May 1, 2012

தமிழ் எண்கள்.....




தமிழ் எண்கள் என்பது தமிழில் பயன்படுத்தப்படும் எண்களை குறிக்கும். இவ்வெண் வடிவங்கள் பிற தமிழ் எழுத்துக்களின் வடிவங்களை மிகவும் ஒத்து காணப்படும். தமிழ் எண்களும் கிரந்த எண்களும் ஒரே எண் வடிவைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கிரந்த எண்களைப்போல் தமிழில் சுழியம் கிடையாது. தமிழ் எண்கள் தற்போது பெருவழக்கில் இல்லை, தமிழில் எண்களை எழுத இந்தோ-அரேபிய எண்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் எண்களில பழங்காலத்தில் சுழியம் (பூஜ்யம்) இல்லாமல் போயினும், தற்காலத்தில் சுழியம் தமிழில் எண்களை எழுதும் போது பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
1825ஆம் ஆண்டு வெளி வந்த கணித தீபிகை என்னும் நூல் கணித செயல்பாடுகளை எளிமையாக்கும் பொருட்டு தமிழில் சுழியம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறுகிறது. ஒருங்குறியின் 4.1 பதிப்பில் இருந்து தமிழ் எண் சுழியம் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தும் முறை

தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் (Positional System) எழுதப் பயன்படுத்தப்படவில்லை. 10, 100, 1000 ஆகியவற்றுக்குத் தனித்தனி குறியீடுகள் இருப்பதைக்கொண்டு இதை அறியலாம். தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்களைச் சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே (Abbreviational System) பயன்படுத்தப்பட்டது. சுழியம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.
உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது.
அதாவது,
இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று

௨-௲-௪-௱-௫-௰-௩
தற்கால புதிய முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகிறது .

பின்ன வடிவங்களை குறிக்கவும் > http://tamilelibrary.org/teli/numeral.html தமிழ் குறியீடுகள் இருந்தன.
மேலும் @ https://www.facebook.com/photo.php?fbid=10150208886612473&set=a.10150180959712473.306123.141482842472&type=3&theater

கவனிக்க: ஒருங்குறி அட்டவணையில் - எழுத்துரு அமைப்பில் எண் 6 ற்குரிய வடிவம் சற்று -சிறிதளவு மாறுபட்டதாக அமைக்கப்பட்டுவிட்டது. எனினும் எண் 6 எழுத அத்னையே பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

No comments: